பதிவு செய்த நாள்
14
பிப்
2019
03:02
கிருஷ்ணகிரி: லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், முதலாமாண்டு நிறைவு விழாவையொட்டி, முதல் நாளில், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரண்டாவது நாள், காலை, 4:00 மணிக்கு, கோ-பூஜை, சிறப்பு அபிஷேகம், ரதசப்தமி உற்சவம் நடந்தது. பின், சுவாமி திருவீதி உலா நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, 1,008 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சத்தியா, அர்ச்சகர் பார்த்தசாரதி, ஆலய நல கமிட்டி தலைவர் உதயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.