பதிவு செய்த நாள்
15
பிப்
2019
01:02
புதுச்சேரி: புதுச்சேரி சாரம் மாசிமகம் வரவேற்பு குழு சார்பில், 30ம் ஆண்டு மாசி மகம் வரவேற்பு விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நடக்க உள்ள கடல் தீர்த்தவாரிக்கு, செஞ்சி அரங்கநாதர், மயிலம் சுப்ரமணிய சுவாமி, மேல்மலையனூர் அங்காளம்மன் ஆகிய சுவாமிகள் எழுந்தருள்கின்றனர். அதையொட்டி, புதுச்சேரி சாரம் மாசிமகம் வர வேற்பு குழு சார்பில், வரும் 18ம் தேதி இரவு 8.00 மணிக்கு, மூன்று சுவாமிகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.19ம் தேதி, மாசிமகம் கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்து, அரங்கநாதர், சுப்ரமணிய சுவாமி, அங்காளம்மன் ஆகிய மூன்று சுவாமிகளும், சாரம் நடுத்தெருவில் உள்ள சித்தி புத்தி விஜயகணபதி கோவிலில் எழுந்தருள்கின்றனர்.
வரவேற்பு குழு சார்பில், தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு 108 கலசாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, வரும் 22ம் தேதி காலை 9.00 மணிக்கு 108 கலசம் ஆவாகனம், யாகசாலை பூஜை, 96 வகை மூலிகை சன்னவதி ஹோமங்கள் நடக்கிறது. மதியம் 2.00 மணிக்கு பொய்யா மொழி விநாயகருக்கு 108 கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 23ம் தேதி இரவு 8.00 மணிக்கு மூன்று சுவாமிகளுக்கும் அபிஷேக, தீபாராதனை செய்து, வழியுனுப்பு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, விழா குழு தலைவர் ஆதிகேசவன், செயலாளர் ரவி, பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் செய்துள்ளனர்.