திருக்கோஷ்டியூர் தெப்ப உற்ஸவம்: தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2019 11:02
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவத்தை முன்னிட்டு பெண்கள் தெப்பக்குள படித்துறையில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இக்கோயிலில் பதினொரு நாட்கள் தெப்ப உற்ஸவம் நடக்கும். பிப்.,10 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடக்கிறது. நேற்று மாலை ஆண்டாள் சன்னதியில் கண்ணன் திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளி மாலை மாற்றுதல் நடந்தது. தொடர்ந்து வீதிஉலா வந்தார். இத்தலத்தில் விளக்கேற்றி பிரார்த்தனை நடத்துவது ஐதீகம். நேற்று ஏராளமான பெண்கள் தெப்பக்குள படித்துறை மற்றும் சுற்று பகுதிகளில் தீபம் ஏற்றினர். இன்று மாலை சூர்ணாபிஷேகம், பிப்.,18 ல் வெண்ணெய்த்தாழி சேவையும், பிப்.,19 பகல் 11:00 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு தெப்பமும் நடக்கும். தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடையும். ஏற்பாட்டை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள் செய்தனர்.