கோட்டை மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2019 11:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் நேற்று 2 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் ஜன.31 ல் பூத்தமலர் பூ அலங்காரம், பிப்.1 ல் பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து சாட்டுதல் விழா, பிப்.5 ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அதன் பின், பிப்.8 ல் அம்மன் நாகல் நகர் புறப்பாடு நடந்தது.நேற்று பூக்குழி இறங்கும் விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் செவ்வாடை அணிந்து பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். சில பக்தர்கள் கையில் குழந்தையை வைத்தபடி பூக்குழி இறங்கினர். அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இரவில் அம்மன் திருத்தேர் வீதியுலா நடந்தது. இதை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.