பதிவு செய்த நாள்
29
பிப்
2012
10:02
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை 7.15 மணிக்கு உற்சவர் சவுமிய நாராயணப் பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர், புண்யாவாகனம் ஆரம்பமானது. கொடி படத்திற்கு பூஜை, அபிஷேக, தீபாராதனை நடந்தது. மதியம் 12.41 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின், கொடிமரத்திற்கு பூஜை, அபிஷேக,தீபாராதனைகள் நடந்தன. மாலையில், யாகசாலையில் கலச பூஜை, ஹோமத்திற்கு பின் உற்சவ பெருமாளுக்கு காப்புக்கட்டப்பட்டது. இரவில் பல்லக்கில் பெருமாள் திருவீதி வலம் வந்தார். மார்ச் 7ல், வெண்ணெய்தாழியுடன் கண்ணன் தெப்பத்தில் வெள்ளோட்டமும், மார்ச் 8ல் பகல் தெப்பமும், இரவில் மும்முறை தெப்பம் வலம் வருதலும் நடைபெறும். மறுநாள் காலையில் தீர்த்தவாரியுடன் பெருமாள் மண்டபத்திலிருந்து புறப்பாடு நடக்கும்.திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.