பெருமாளிடம் உள்ள கருணை என்னும் பண்பைத் தாயாக உருவகம் செய்து, வேதாந்த தேசிகர் நுõறு ஸ்லோகங்கள்பாடியுள்ளார். அதற்கு ‘தயா சதகம்’ என்று பெயர். அதில் ஒரு பாடலில், “தயாதேவியே! மென்மை மிக்க மனம் கொண்டவளே! பக்தர் படும் துன்பத்தைப் பொறுக்காதவளே! தேவர்களைக் காப்பவளே! திருவேங்கடத்துப் பெருமாளையும் விட,ஊக்கமுடன் பக்தர்களை நீ நல்வழிப்படுத்துவதால், அவர் உன் மீது அளவில்லாத அன்பு கொண்டிருக்கிறார். நீ சொல்லும் எதையும் அவர் மறுப்பதில்லை. மங்களம் தருபவளே! பெருமை மிக்க குணங்களால் பெருமாளையும் விட, உன்னையே எல்லோரும் மிகுதியாக போற்றுகின்றனர்,” என்று பாடியுள்ளார். கடவுளின் கருணைக்கு எல்லையே இல்லை என்பது இதன் கருத்து.