பிற மதத்தினருடன் நல்லிணக்கமாக இருப்பதையே இஸ்லாம் விரும்புகிறது. குர்ஆன் ஹதீஸ் 8:61,“எதிரிகள் எதிர்த்தால் நாமும் எதிர்க்கலாம். சமாதானமாக இருக்க விரும்பினால் நாமும் சமாதானமாகவே இருக்க வேண்டும்,” என்கிறது.குர்ஆனின் இந்த வழிகாட்டலுக்கு அனைவருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நாமாகவே பயனில்லாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், சண்டை போட்டும் பிரச்னைகள் உருவாக காரணமாக இருக்கக்கூடாது. எதிர்தரப்பினர் எதிர்த்தாலும் கூட நிதானமாகச் செயல்பட வேண்டும். எந்த சூழலிலும் நிதானத்தை விடாமல் இருந்தால் போதும். அங்கு பிரச்னைக்கு இடமே இருக்காது.