பதிவு செய்த நாள்
20
பிப்
2019
02:02
புதுச்சேரி : புதுச்சேரி சின்ன சுப்புராய பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் மகா சண்டியாகம் நடைபெற உள்ளது.இதனையொட்டி,26 ம் தேதி காலை 10.30 மணிக்கு, குருவந்தனம், மகா கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம் நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு சண்டி சப்தஸதீ பாராயணம், அத்யாய ஹோமம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமம், பைரவ, யோகினி பூஜை நடக்கிறது.மறுநாள் 27ம் தேதி காலை 6:௦௦ மணி முதல் பகல் 12:௦௦ மணி வரை சண்டிகா பரமேஸ்வரி விஷேச பூஜை, நவதுர்கா பூஜை, கோ பூஜை, சண்டி யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.