பதிவு செய்த நாள்
21
பிப்
2019
02:02
உத்திரமேரூர் : மானாம்பதி, வானசுந்தரேஸ்வரர் கோவிலில், மாசிமகம் தீர்த்தவாரி உற்சவம், நேற்று (பிப்., 20ல்) காலை வரை விமரிசையாக நடைபெற்றது.உத்திரமேரூர் அடுத்த மானாம் பதியில், வாசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தாண்டிற்கான மாசிமக விழா, நேற்று முன்தினம் (பிப்., 19ல்) நடந்தது.
காலையில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.பகல், 1:00 மணிக்கு, தீர்த்தவாரியை தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, மானாம்பதி கூட்டுச்சாலைக்கு, ஊர்வலமாக, நள்ளிரவில் வந்தடைந்தார்.அங்கு, பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் இருந்து வந்த சுவாமிகள், வானசுந்தரேஸ் வர ரோடு இணைந்ததையடுத்து, அதிகாலை வரை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.இதில், சுற்று வட்டார கிராம பக்தர்கள் பங்கேற்று, தீபம் ஏற்றி, சுவாமிகளை வழிபட்டனர்.