பதிவு செய்த நாள்
21
பிப்
2019
02:02
மேல்மருவத்தூர் : எதிர்வரும் பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் வெற்றி பெற வேண்டி, மேல்மருவத்தூரில் சிறப்பு பூஜை நடைபெற்றது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, மாணவ - மாணவியருக்காக நடைபெற்ற இந்த பூஜையை, ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர், கோ.ப.அன்பழகன் மேற்கொண்டார்.இதில், மதுராந்தகம், வந்தவாசி, அச்சிறுப்பாக்கம், உத்திரமேரூர், திண்டிவனம் பகுதிகளைச் சேர்ந்த, 2,500 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.