பதிவு செய்த நாள்
02
மார்
2019
11:03
திருப்போரூர்: அனுமந்தபுரம் அகோர வீரபத்ரர் சுவாமி கோவிலில், வரும், 4ம் தேதி, மஹா சிவராத்திரி, கோலாகலமாக நடைபெற உள்ளது.
திருப்போரூர் அடுத்த அனுமந்தபுரத்தில், புகழ்பெற்ற அகோர வீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும், மிகவும் கோலாகலமாக நடைபெறும், மஹா சிவராத்திரி விழா, வரும், 4ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை, 10:00 மணிக்கு, உற்சவருக்கு மஹா அபிஷேகம், விசஷே அலங்காரம் மற்றும் துாப தீப ஆராதனை நடக்கிறது.இரவு, 7:00 மணிக்கு, யோகஷே் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும், இரவு, 12:00 மணிக்கு, உற்சவருக்கு வெற்றிலை காப்பு அலங்காரம், சிறப்பு மலர் அர்ச்சனையும் நடக்கிறது.பக்தர்கள், கோவிலில் நாள் முழுவதும் வழிபட வசதியாக, முழுநேரம் நடை திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.