திருப்புவனம்: திருப்புவனம் புதுார் பூமாரியம்மன் ரேணுகாதேவி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் இரவு 9:20 மணிக்கு நடைபெற்றது. திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் எந்த ஊரில் இருந்தாலும் விழாவில் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் வியாழன் இரவு 9:20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு விசஷேபூஜைகள், அபிஷேகம் நடந்தது. செந்தில் பட்டர், கண்ணன் பட்டர், உள்ளிட்டவர்கள் நடத்தினர்.
பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். பொங்கல் உற்ஸவம் மார்ச் 8ம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில் குமார் பட்டர், சாமிகண்ணு பட்டர், ரமஷே் பட்டர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் திருப்புவனம் மக்கள் செய்திருந்தனர். கொடியேற்ற வைபவத்திற்கான சீர் வரிசை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.