காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் 6.98 லட்ச ரூபாய் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2019 01:03
காரைக்குடி:காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழா வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். நேற்று (மார்ச்., 1ல்) கோயில் உண்டியல் எண்ணும் பணி உதவி ஆணையர் ராமசாமி தலைமையில் தொடங்கியது.
உமையாள் ராமனாதன் கல்லூரி மாணவிகள், லலித முத்துமாரியம்மன் சேவைக்குழுவினர், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 6 லட்சத்து 98 ஆயிரத்து 543 ரூபாய் மற்றும் 18 வெளிநாட்டு டாலர்கள், 69 கிராம் தங்கம், 420 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகுபாண்டி செய்திருந்தனர்.