மேல்மலையனுார் அங்காளம்மன் தேர் திருவிழா: வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2019 12:03
விழுப்புரம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர் உற்சவத்தை முன்னிட்டு வரும் 11ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் வரும் 11ம் திருத்தேர் உற்சவம் நடக்கிறது. இதனால், அன்று (11ம் தேதி) ஒரு நாள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.அன்றைய தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு, விழுப்புரம் மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலைக் கருவூலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும்.மேலும், மாணவ, மாணவிகளுக்கு, (11ம் தேதி) பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின், அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும்.உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 11ம் தேதிக்கு பதிலாக வரும் 27ம் தேதி பணிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.