பதிவு செய்த நாள்
02
மார்
2019
01:03
ஊட்டி: ஊட்டி அருகே காந்தள் காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி பெருவிழா துவங்கியது.பிரசித்தி பெற்ற காந்தள் காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இன்று (மார்ச்., 2ல்), மாலை, 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை, 3ம் தேதி, மாலை, 3:30 மணிக்கு மகா பிரதோஷ பூஜை நடக்கிறது. 4ம் தேதி காலை, 7:00 மணிக்கு கால சாந்தி பூஜை, 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியை தொடர்ந்து, மகா தீபாராதனை நிகழ்ச்சி, சுவாமி ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
அன்று, மாலையில், நிர்தியா கலாலயா குழந்தைகள் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:15 மணிக்கு ஆன்மிக வயலின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.