பதிவு செய்த நாள்
04
மார்
2019
02:03
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று (மார்ச் 4ல்.,) துவங்குகிறது.400 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மஞ்சளாற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குமூடப்பட்ட கதவிற்கு பூஜை செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் அணையா நெய்விளக்கு எரிகிறது.மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோயில் ஆண்டு தோறும் மகாசிவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுதிருவிழாவிற்காக் பிப். 12 ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இன்று (மார்ச் 4ல்.,) மாசி மகா சிவராத்திரிதிருவிழா துவங்குகிறது. மார்ச் 8 வரை விழா நடைபெறும். விழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில்இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு,பெரியகுளத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேவதானப்பட்டி ஆரம்பசுகாதார நிலையம் சார்பில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக 400 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில்ஈடுபட்டுள்ளனர். மேலும் தகவல் பெற விரும்புவோர் கோயில் செயல் அலுவலர் சந்திரசேகரனை 83445 43344 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்
சிறப்பு பஸ்கள்: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா இன்று மார்ச் 3 முதல் 11 நாட்கள் நடக்கிறது. வத்தலக்குண்டு, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. வத்தலக்குண்டு, பெரியகுளம், தேவதானப்பட்டி, காமாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு உதவ வழிகாட்டும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நிர்வாக இயக்குனர் சேனாதிபதி தெரிவித்துள்ளார்.