Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சப்தரிஷிகளின் சரித்திரம் பொய்சாட்சி குறித்து ஆன்மிகம் என்ன ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2019
03:03

 விஸ்வேஷ்வரன், வைத்தீஸ்வரன், ஷிவா, காலா, ஷம்போ, ஈஸ்வரன், ஆதியோகி.கேள்வி: சத்குரு, சிவனின் வெவ்வேறு பெயர்களின் மூலம் என்ன?சத்குரு: ஷிவா என்ற வார்த்தை இரண்டு விதங்களில் குறிக்கப்படுகிறது. ஒரு நிலையில், நாம் ஷிவா என்று கூறும்போது, படைப்புக்கு மூலமாக இருக்கின்ற அந்த எல்லையற்ற வெறுமையைக் குறிக்கின்றோம்.


வானத்தை கூட அண்ணாந்து பார்த்தால், பரந்த வெற்றுவெளியை தான் காண்கிறீர்கள். முக்கியமாக, பிரபஞ்சம் என்பது, பரந்த வெற்றுவெளியாகவும், ஒரு சிறிதளவு படைப்பாகவும் இருக்கிறது. படைப்பு இருந்தாலும், அதை தாங்கிப் பிடித்திருக்கும் பரந்தவெளியுடன் ஒப்பிட்டால், படைப்பு ஒரு சிறு துளியாகத்தான் இருக்கிறது. ஆகவே, இதற்கு அடிப்படையாக இருக்கின்ற அந்த வெற்றுவெளி, ஷிவா என்று குறிக்கப்படுகின்றது. ஷிவா என்றால் எது இல்லையோ அது. அதே சமயத்தில், ஆதியோகியையும் நாம் ஷிவா என்று குறிப்பிடுகிறோம். ஏனென்றால், அவர் அதை உள்வாங்கிக் கொண்டார்.நீங்கள் உள்வாங்குவது என்னவாக இருந்தாலும், அதுவும் உங்களில் ஒரு பகுதியாகி விடுகிறது.


நீங்கள் ஏதோ ஒன்றை உள்வாங்கிய காரணத்தால், இன்றைக்கு ஏதோ ஒன்றாக உங்களையே நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள்.நீங்கள் கிரகித்து கொள்ளும் எதுவும், உங்களின் ஒரு பகுதியாகி விடுகிறது, அவ்வளவுதான். ஆதியோகி ஒன்றும் இல்லாத தன்மையை உள்வாங்கிக்கொண்டார், அதனால் நாம் அவரை ஷிவா என்றழைக்கிறோம். மேலும், நாம் ஷிவாவை குறித்துப் பேசும்போது, நாம் வெற்றுவெளியைக் குறித்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய அதேநேரத்தில், ஆதியோகியைக் குறித்தும் பேசிக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் இருவருக்கும் இடையில் நாம் கோடு போடுவதில்லை. புரிந்துகொள்ளப்படும் எதுவும், புரிந்துகொள்பவரும் வேறு வேறு அல்ல.இது ஒரு மனிதன் என்ற நிலை, அது முடிவில்லாத ஒரு வெறுமை நிலை, ஆனால் அங்கே வேறுபாடு இல்லை. ஏனென்றால் அவர் அதை கிரகித்துக்கொண்டார். படைப்பின் ஒவ்வொரு பகுதியிலும், அது எவ்வளவு சிறியதோ அல்லது பெரியதோ, படைப்பின் மூலம்,தொடர்ந்து தன் விளையாட்டை அதில் நிகழ்த்தியவாறு உள்ளது.தஞ்சைப் பகுதிகளுக்கு சென்றால், சிவனுக்கென்று 100க்கணக்கான கோவில்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கின்றன.அவரை ஒரு மருத்துவராக உருவகிக்கும் வைத்தீஸ்வரன் கோவில்.


வைத்தீஸ்வரன் கோவில் என்றால், சிவன் இங்கே ஒரு மருத்துவராக அமர்ந்தார். ஆகவே அந்தப் பாரம்பரியம் - அவர்கள் பயன்படுத்தும் மந்திரங்களின் விதம், சடங்குகளின் விதம், அவருடன் அவர்கள் என்ன செய்கின்றனர் - அது தொடர்ந்து பராமரிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே சில குடும்பங்கள், தங்களை அர்ப்பணித்து கொண்டதுடன், ஆயிரக்கணக்கான வருடங்களாக அதை பராமரித்து வந்துள்ளனர். கடந்த, 20ம் நூற்றாண்டின் இறுதிகளில் மற்றும், 21ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் தான், இந்த பாரம்பரியங்கள் சீர்குலைந்து கொண்டிருக்கின்றன.சிவனின் கோடிக்கணக்கான வடிவங்களை உருவாக்குவதற்கு நமக்குக் காலம் போதாத காரணத்தால், ஒரு சில ஆயிரம் வடிவங்களை மட்டும் உருவாக்கினோம். மக்களுக்கு ஆரோக்கியம் தேவை, நல்வாழ்வு தேவை, வெற்றி தேவை, முக்திகூட தேவை. எல்லாமே கிடைத்துவிட்டால், பிறகு அவர்கள் முக்தியைத் தேடுகின்றனர். அதனால், நமக்கு முக்தீஷ்வரர், யுக்தீஷ்வரர் இருக்கின்றனர். நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ, அதற்கேற்ற விதமான சிவனின் வடிவத்தை நாடுகிறீர்கள்.வாழ்வின் ஒரு குறிப்பிட்ட அம்சம், ஒரு உயிரோட்டமான வடிவமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


அந்த வடிவம் ஷிவாவின் வடிவமாக குறிப்பிடப்படுகிறது. மக்கள் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இது உருவாக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட விதத்தில் வெளிப்படுத்தப்பட்ட, ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பமாகவே இருக்கிறது. இது, தன்னியல்பான ஒரு தொழில்நுட்பமாக இருக்கும் காரணத்தால், அதை நீங்கள் உணர வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருக்கவேண்டும்; இல்லையென்றால், நீங்கள் அதை உணரமாட்டீர்கள்.ஷிவாவின் வடிவங்கள் எத்தனை? ஷிவாவின் வடிவங்கள், கோடான கோடி உள்ளன. ஆனால், இந்த எல்லா வடிவங்களும் ஏழு அடிப்படையான வடிவங்களிலிருந்து உருவெடுத்துள்ளன. தொன்றுதொட்டு, ஈஸ்வரன் என்ற பெயரில் நாம் அழைப்பது, அவரது ஒரு வடிவத்தை. கள்ளங்கபடமில்லாத மற்றொரு வடிவம் போலா என்றழைக்கப்படுகிறது.ஒரு குழந்தையைவிட வெகுளித்தனமானவர் போலா. அடுத்ததாக, சுபிக் ஷமான ஒருவர் ஷம்போ என்றழைக்கப்படுவது.


அடுத்ததாக காலத்தை குறிப்பவராக, காலா அல்லது மஹாகாலா இருக்கிறார். காதல் வசீகரம் பொருந்திய சுந்தரேசன் அல்லது சுந்தரமூர்த்தி மற்றும் அனைத்து கலை வடிவங்களின் வெளிப்பாடாக இருக்கும் நடேசன்.கலை என்று நாம் கூறும்போது, யோகத்தில் கலை என்பது வான சாஸ்திரம், கணிதம், நடனம், இசை மற்றும் மனிதர் திறனுக்கு உட்பட்ட அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த ஏழு வடிவங்களும் ஒவ்வொன்றும் பதினாறாகப் பெருகி, மொத்தமாக 112 வடிவங்கள் ஆகின்றன. அவை மென்மேலும் பல்கிப்பெருகி லட்சக்கணக்கான வடிவங்களாகின்றன.ஆகவே, ஷிவாவைக் குறிப்பிடும் மற்ற எல்லா பெயர்களும் மற்றும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு படைப்பும், அந்த ஒன்றுமில்லாத தன்மையிலிருந்து வெளிப்பட்டதுதான், அப்படித்தானே? இன்றைக்கு இது அறிவியல்பூர்வமான உண்மையாக இருக்கிறது. அது என்னவாக இருந்தாலும், உலகத்தில் உள்ள அனைத்தும் இதிலிருந்து வந்தவைதான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar