சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன்கோயில்கள், கிராம கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் உள்ள கோயில்கள் விவரம்: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், நெல்லை நெல்லையப்பர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தஞ்சை பெரியகோயில், திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருவாணைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு நடந்தன. கிராமங்களில் உள்ள குலதெய்வ கோயில்கள், காவல் தெய்வங்கள் கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.கோவை ஈஷா யோகா மையத்தில் விடியவிடிய சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.