பணகுடி :பாம்பன்குளம் நாராயணசாமி கோயில் சாமியார்பதி புதிய கட்டட திறப்பு விழா மற்றும் திருவிழா நடந்தது. முதல்நாள் விழாவில் பாம்பன்குளத்திற்கு சாமிதோப்பு தலைமை பதியில் இருந்து பதம் எடுத்து வந்ததை ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து புதிய கட்டட திறப்பு விழா, அன்னதர்மம் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் விழாவில் அய்யாபட்டி சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பாம்பன்குளம் அன்புகொடி மக்கள் செய்திருந்தனர்.