வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மஹா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மார்ச் 4 முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். தாணிப் பாறை மலையடிவாரத்தில் குவிந்த பக்தர்கள் வனத்துறையினர் சோதனைக்கு பின் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் நடந்த மஹா சிவராத்திரி மற்றும் அமாவாசை சிறப்பு பூஜையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்க சாமிகளுக்கு பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், போன்ற பல்வேறு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருதுநகர்,மதுரை போலீசார்,வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.