பதிவு செய்த நாள்
07
மார்
2019
02:03
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே வக்கம்பாளையம் ஜக்கம்மன் திருவிழாவில், குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொள்ளாச்சி அருகே வக்கம்பாளையத்தில், ஜக்கம்மன் கோவில் திருவிழா கடந்த, 19ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.கடந்த, 26ம் தேதி இரவு சக்தி கும்பம், தீர்த்தம் எடுத்தல் நிகழ்ச்சியும்; நேற்றுமுன்தினம் (மார்ச்., 5ல்) குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று (மார்ச்., 6ல்), காலை, 7:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். நாளை, 8ம் தேதி மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.