பதிவு செய்த நாள்
07
மார்
2019
02:03
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மாவட்டத்தின் முக்கிய ஆன்மிக தலமாக திகழ்வதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று, (மார்ச்., 6ல்)அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அம்மனை தரிசித்துச் சென்றனர்.
அம்மனுக்கு காலை, 6:30 மணிக்கு முதல் கால பூஜை; காலை, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை; மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது.பொள்ளாச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆனைமலைக்கு, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் கவர்களை கோவில் வளாகத்தில் பறிமுதல் செய்தனர்.