பதிவு செய்த நாள்
07
மார்
2019
02:03
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், மயான கொள்ளை விழா விமரிசையாக நடைபெற்றது. பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில், ஆண்டு தோறும் நடக்கும் மயான கொள்ளை விழா, விமரிசையாக நடைபெற்றது.
விழாவில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி ஊர்வலமாக சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், பல வேடமிட்டு, ஊர்வலத்தில் சென்றனர்.பழைய ரயில் நிலையம் அருகில் உள்ள இடுகாட்டிற்கும், வெள்ளக்குளம் இடுகாட்டிற்கும், மாலை, 6:45 மணிக்கு, ஊர்வலம் சென்றடைந்தது.
கூவத்துார், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், வாலாஜாபாத் அடுத்த கோவிந்தவாடி அகிலாண்டீஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை நடந்தது.திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலிலும் இவ்விழா நடந்தது.