பதிவு செய்த நாள்
07
மார்
2019
02:03
அன்னூர்: காக்கபாளையத்தில் பல தலைமுறைகளாக வழிபட்டு வந்த விநாயகர் கோவிலில், புதிதாக, கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், மூல கோபுரம், குறிஞ்சி கோபுரம், செல்வ விநாயகர் மற்றும் மாதேஸ்வர சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து கும்பாபிஷேக விழா, நாளை (மார்ச்., 8ல்) கிராம சாந்தியுடன் துவங்குகிறது. கணபதி ஹோமம், புனித தீர்த்தம் எடுத்து வருதல், முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. 9ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால வேள்வி பூஜை, சுவாமி நிலை நிறுத்துதல். வாகை குழுவின் பஜனை மற்றும் கோபியர்களின் கோலாட்டம் நடக்கிறது. 10ம் தேதி காலை 7:00 மணிக்கு செல்வ விநாயகர், லட்சுமி நாராயணன், மாதேஸ்வரசுவாமி உள்ளிட்ட மூல தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.காலையில் செண்டை மேளமும், மாலையில் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.