ஊத்துக்கோட்டை: சிவராத்திரி விழாவின் இறுதி நாளில் உற்சவர் பள்ளி கொண்டீஸ்வரர், ராவணாசூர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில், மாசி மாதம் நடைபெறும் மகா சிவராத்திரி விழா சிறப்பு வாய்ந்தது. 25ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் உற்சவர் சந்திர பிரபை, காமதேனு, பூத, அதிகாரநந்தி உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நாளான 4ம் தேதி, நான்கு கால அபிஷேகம் மற்றும் 5ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, உறசவர் ராவணாசூர வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.