குதிரைமலையான் கருப்பணசுவாமி கோயிலில் பாரிவேட்டை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2019 12:03
பெரியபட்டினம்: பெரியபட்டினம் குதிரைமலையான் கருப்பணசுவாமி கோயிலில் மாசி களரி சிவராத்திரியை முன்னிட்டு இரவில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. மூலவர்கள் குதிரைமலையான், சத்தீஸ்வரி சப்த கன்னிமார்கள், கருப்பணசுவாமி கோயிலுக்கு முன்பு பெண்கள் பொங்கலிட்டனர். ஆடு, கோழி பலியிடப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏராளமான குலதெய்வ குடிமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.