பழநி: பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பழநி பெரிய நாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை, திருஆவினன் குடிகோயிலிலுக்கு எழுந்தருளுகின்றனர்.
அங்கு மார்ச் 15ல் காலையில் கொடியேற்றமும், மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதலும் நடக்கிறது. ஆறாம்நாளான மார்ச் 20ல் இரவு திருக்கல்யாணம், வெள்ளி தேரோட்டம், ஏழாம் நாள் மார்ச் 21ல் மாலை கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.விழா நாட்களில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வழிபடுவர்.