பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் 13ம் தேதி ராமநவமி விழா துவக்கம்
பதிவு செய்த நாள்
08
மார் 2019 01:03
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், வரும் 13ம் தேதி ஸ்ரீராமநவமி விழா துவங்குகிறது. திண்டிவனம் – புதுச்சேரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி விழா, வரும் 13ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி அன்று மாலை 6.௦௦ மணிக்கு ஸ்ரீராமநவமி ஆரம்ப பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, மஹா சங்கல்பம், புண்யாஹவாசனம், மிருத்ஸங்கி்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி நடக்கிறது.
14ம் தேதி வியாழக்கிழமை காலை 7.௦௦ மணிக்கு அக்னிமதனம், அக்னி பிரணயனம், கும்ப ஆவாஹனம், ஜபம், சாற்றுமுறை, லட்சார்ச்சனை, மாலை ஸ்ரீராம தைவத்ய காயத்திரி மூலமந்திர ஹோமம் நடக்கிறது. 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.௦௦ மணிக்கு புண்யாஹவாசனம், பஞ்சஸூக்த ஹோமம், ஜபம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, லட்சார்ச்சனை நடக்கிறது. 16ம் தேதி காலை 7.௦௦ மணிக்கு ஸ்ரீராமநவமி உற்சவம் புண்யாஹவாசனம், காலசாந்தி விசேஷ மூலமந்திர ஹோமம், திருவாராதனம், லட்சார்ச்சனை நடக்கிறது.
8.45 மணிக்கு ராமர் மற்றும் 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் ஆகிய மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து, ராமர், ஆஞ்ஜநேயர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ரேவதி கிருஷ்ணா மற்றும் குழுவினரின் வீணையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீராமநவமி உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்ஜநேய சுவாமியின் அருளைப் பெறுமாறு ஸ்ரீஜெமாருதி சேவா டிரஸ்டியினர், தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.
|