ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில் பங்குனி உத்திர புஷ்ப லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2019 01:03
ஆரியன்காவு: செங்கோட்டை அருகே ஆரியன்காவு தர்ம சாஸ்தா கோயிலில் மார்ச் 21ல் பங்குனி உத்திர புஷ்ப லட்சார்ச்சனை நடக்கிறது. ஐயப்பனின் அவதார தினம் மார்ச் 21 கொண்டாடப்படுகிறது. அனைத்து உயிரினங்களையும் நலமுடன் வாழ வைக்கும் ஐயப்பனுக்கு நன்றி சொல்லும் வண்ணம் ஆரியன்காவு தர்ம சாஸ்தா கோயிலில் லட்சார்ச்சனை மார்ச் 21 காலை 6:00 மணிக்கு துவங்குகிறது. நாடகசாலை மேடையில் யாகசாலை அமைக்கப்பட்டு, சுற்றிலும் தீர்த்த கலசங்கள் ஸ்தாபிக்கப்படும். பிரம்ம கலசத்தில் பகவானை அவாஹனம் செய்து ஊர்வலமாக எடுத்து சென்று தர்ம சாஸ்தா சன்னதிக்கு கொண்டு சென்று 25 தந்திரிகளால் ஏகதின புஷ்ப லட்சார்ச்சனை நடத்தப்படும்.
மாலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் மந்திர புஷ்ப அர்ச்சனைகளால் சக்தி உருப்பெற்ற பஸ்மமும், தீர்த்தங்களும், பிரம்ம கலசங்களில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும். பின் மகா புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. ஏற்பாடுகளை ஆரியன்காவு மக்கள், கோயில் அட்வைசரி கமிட்டி, ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மஹாஜன சங்க நிர்வாகிகள் கே.ஆர்.ராகவன், எஸ்.ஜெ.ராஜன், ஹரிஹரன், சுரேஷ், கண்ணன் செய்து வருகின்றனர். தமிழக, கேரள பக்தர்கள் முதல் முறையாக கலந்து கொள்கின்றனர்.