பதிவு செய்த நாள்
09
மார்
2019
01:03
சென்னிமலை: ஈரோடு, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம், வரும், 18ல், கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 19ல் கொடியேற்றம், 20ல், திருக்கல்யாணம் நடக்கிறது.21ல், காலை 6:00 மணிக்கு மேல், 7:00 மணிக்குள், தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு, தேர் நிலை சேரும். 22ல், காலை பரிவேட்டை நிகழ்ச்சி, இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 23 இரவு, 8:00 மணிக்கு, மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, உதவி ஆணையாளரும், தக்காருமான நந்தகுமார், செயல் அலுவலர் அருள்குமார் உளிட்டோர், செய்து வருகின்றனர்.