பதிவு செய்த நாள்
09
மார்
2019
01:03
ஆர்.கே.பேட்டை,:கோடையில் மழை வேண்டியும், உலக ஜீவன்கள் நலம் வேண்டியும், கிராமங்களில் திரவுபதியம்மனுக்கு அக்னி வசந்த உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் முதல் உற்சவமாக, பொதட்டூர்பேட்டை தர்மராஜா கோவிலில், கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா, நேற்று துவங்கியது. மாலை, 3:00 மணிக்கு, கோவிலில் கொடியேற்றப் பட்டது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அடுத்த,18 நாட்களுக்கு இந்த உற்சவம் தொடரும். இறுதி நாளில், துரியோதனன் படுகளமும், திரவுபதியம்மன் அக்னி பிரவேசமும் நடைபெறும்.