பங்குனி பூக்குழி விழா: மாரியம்மன் கோயிலில் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2019 11:03
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி விழா காப்புக்கட்டுடன் தொடங்கியது.ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பங்குனி பூக்குழி விழாவிற்கான காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் யாகம் வளர்க்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர். விழா நாட்களில் தினமும் இரவு 7:30 மணிக்கு அக்னி சட்டியுடன் முக்கிய வீதிகளில் வலம் வரும் நிகழச்சி நடக்கவுள்ளது. மார்ச் 20 ல் பகல் 1:30 மணிக்கு பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9:00 மணிககு அக்னி சட்டியுடன் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாக செயலாளர் கே.பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் எம்.ராமு, கோயில் விசாரணைதாரர் ஜி.கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.