சபரிமலை: பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று (மார்ச் 11) மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி மாலை 5 மணிக்கு நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்வர்.
சபரிமலையில் வருடாந்திர உற்சவம் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. கோயில் நடை இன்று(மார்ச் 11) திறக்கப்பட்டது. கருவறை வாயிலில் தங்கத்தகடுகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட கதவுகள் பொருத்தப்பட உள்ளன. பழைய கதவில் சிறிய பிளவு ஏற்பட்டிருந்த நிலையில், தேக்கு மரத்தால் ஆன புதிய கதவு பொருத்தப்பட்டு, 4 கிலோ தங்கத்தகடுகள் வேயப்பட்டுள்ளன. 10 நாள் விழாவுக்கு பின் 21ம் தேதி திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்.