பதிவு செய்த நாள்
11
மார்
2019
11:03
கூடலுார்: கூடலுாரில், விடிய விடிய நடந்த, காமன் பண்டிகை திருவிழாவை, திரளான மக்கள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம், கூடலுாரில், காமன் பண்டிகை திருவிழா, ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, பிப்., 19ல், விழா துவங்கியது.ரதி - மன்மதன் வேடமிட்டவர்கள், தினமும் இரவில், வீடு வீடாக சென்று, நடனமாடி வந்தனர். இறுதி நிகழ்வாக, ரதி - மன்மதன் திருமண விழா, நேற்று முன்தினம் துவங்கியது.
தொடர்ந்து, ரதி - மன்மதன் சிறப்பு முன்னோட்ட ஆட்டம், விநாயகர் கோவிலில் இருந்து, தேர் ஊர்வலம், சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் ரதி - மன்மதன் திருமணம், மொய் விருந்து, ரதி - மன்மதன் நடனம், ஊர்வல நிகழ்ச்சிகள் நடந்தன. மன்மதனை, சிவன் நெற்றி கண்ணால் எரித்த நிகழ்ச்சி, அதிகாலை, 5:30 மணிக்கு, அரங்கேற்றப்பட்டது.