பதிவு செய்த நாள்
11
மார்
2019
01:03
ஓசூர்: ஓசூர் முனீஸ்வரர் கோவில் திருவிழாவில், கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில், முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 14ம் ஆண்டு திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு, வ.உ.சி., நகர், துவாரகா நகர், முனீஸ்வர் நகர், முனீஸ்வர் நகர் விரிவாக்கம், சிவக்குமார் நகர் ஆகிய பகுதிகளில், சுவாமி உற்சவ வீதி உலா நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, கோவிலில் பொங்கல் வைத்து சுவாமிக்கு பக்தர்கள் படைத்தனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முனீஸ்வர் நகர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.