பதிவு செய்த நாள்
11
மார்
2019
01:03
பெ.நா.பாளையம்: ஏத்தாப்பூர், வசிஷ்ட நதிக்கரையிலுள்ள, சமயபுரம் மாரியம்மனுக்கு, எட்டாமாண்டு பூச்சாட்டு விழா, நேற்று காலை நடந்தது. அதில், கோ, கஜ, அஸ்வ பூஜை நடந்தது. தொடர்ந்து, யானை, குதிரை, பசுவுடன், மேள, தாளம் முழங்க, ஏராளமான பெண்கள், தட்டில் பூக்களை வைத்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். மதியம், மாரியம்மனுக்கு பூக்களை தூவி, பெண்கள் வழிபட்டனர். மூலவர் அம்மன், மலர் குவியலுக்கு நடுவே அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, ஊர்மக்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.