பதிவு செய்த நாள்
11
மார்
2019
01:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தேவம்பாடி காளிபாளையம் மந்தகாட்டு கருப்பராயன் கோவிலில், குண்டம் திருவிழா நடந்தது.தேவம்பாடி காளிபாளையம் மந்தகாட்டு கருப்பராயன், காளியம்மன் கோவிலில், 34ம் ஆண்டு பள்ளைய விழா நடந்தது. திருவிழா கடந்த, 1ம் தேதி கொடி கட்டுதலுடன் துவங்கியது.
கடந்த, 7ம் தேதி பெரிய கருப்பராயன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதலும், இரவு அன்னதானமும் நடந்தன.கடந்த, 8ம் தேதி காலை கணபதி ஹோமம், புண்ணியாக வாசனம், குண்டம் திறப்பு, பூ வளர்த்தலும்; மதியம் பள்ளைய பூஜை, கங்கை செல்லுதலும் நடந்தன.அன்று மாலை, பூசாரி தலைமையில் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கினர். தொடர்ந்து, அக்னி தணிப்பு, அபிஷேக பூஜை மற்றும் அருள் வாக்கு கூறப்பட்டது. திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.