நெட்டப்பாக்கம்: ராமரெட்டிக்குளம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த ராமரெட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று மாலை 3.௦௦ மணிக்கு மாயனக் கொள்ளை விழா நடந்தது. ராமரெட்டிக்குளம் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள், தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை மயானத்தில் இரைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.