பதிவு செய்த நாள்
12
மார்
2019
02:03
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. ராசிக்கவுண்டனூரில், சடையப்பசுவாமி மற்றும் ஐயனாரப்பன் கோவில்கள் உள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் காலாங்கி சித்தர்கோவிலுக்கு சென்றனர். அங்கு கிணற்றில் உள்ள தீர்த்தத்தை, குடங்களில் நிரப்பி பூஜை செய்தனர். பின், யானை முன்னே செல்ல தாரை தப்பட்டை, பம்பை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவில் வளாகத்தை அடைந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, இரவு, 7:00 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை, நாளை காலை, 5:30 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் ஐயனாரப்பன், சடையப்ப சுவாமிக்கு
கும்பாபிஷேகம் நடக்கிறது.