பதிவு செய்த நாள்
13
மார்
2019
01:03
வீரபாண்டி: முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமையான நேற்று, ஒரே நாளில் சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து, மங்கள சஷ்டி கிருத்திகை நாளாக அமைந்தது. சஷ்டி, கிருத்திகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் திருமண தடை, குழந்தை வரம் கேட்டு விரதம் இருந்து, சேலம் காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், ஒவ்வொரு மாதமும் வழிபாடு நடத்துவர். சஷ்டியில் விரதம் இருந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும், இதே போல் கிருத்திகை விரதம் இருந்தால், திருமண தடை விலகும் என்பதும் நம்பிக்கை. இந்த இரண்டும் சேர்ந்து, அபூர்வமாக ஒரே நாளில் அதுவும் கந்தனுக்கு உகந்த செவ்வாய் கிழமையில் நேற்று வந்தது. இதையொட்டி, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மூலவர் கந்தசாமிக்கு சிறப்பு அபி ?ஷகம் செய்யப்பட்டு, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வள்ளி, தெய்வானை சமேதராக கந்தசாமி உற்சவர், வெள்ளி கவசத்தில் நவரத்ன அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.