பதிவு செய்த நாள்
13
மார்
2019
01:03
ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தற்காலிக கடைகள் ஏலம் இன்று நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 19ல், தொடங்குகிறது. இதை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைக்க, கடந்த, 5ல் ஏலம் நடப்பதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட ஏலம் இன்று நடக்கிறது. தேர்தல் விதிமுறையால், ஏலம் நடக்குமா? என்று கேள்வி எழுந்தது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, டெண்டர் அறிவிப்பு வெளியானதால், அறிவித்தபடி ஏலம் இன்று ஏலம் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் கூறியதாவது: நடப்பாண்டு, 39 கடைகளுக்கு ஏலம் நடக்கிறது. கடந்த, 2009ல் இதேபோல் தேர்தல் அறிவிப்புக்கு பின் ஏலம் நடந்துள்ளது. இதுவரை ஏலம் எடுக்க, 31 பேர் டிபாசிட் செலுத்தியுள்ளனர். ஏலம் நடக்கும் இடம் மட்டும், பெரியார் நகர் ஏரி, கருப்பண்ணசாமி கோவில் வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.