பதிவு செய்த நாள்
14
மார்
2019
02:03
ஊத்துக்கோட்டை:லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அரசு பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு, மாணவ - மாணவியர், பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, லட்சிவாக்கம், லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இந்த ஆண்டு, அரசு பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில், 173 மாணவர்கள் உள்ளனர்.
பத்தாம் வகுப்பு, அரசு பொதுத் தேர்வு, இன்று (மார்ச்., 14ல்) துவங்க உள்ள நிலையில், நேற்று (மார்ச்., 13ல்) காலை, பள்ளியில் பெற்றோருக்கு, அவர்களின் பாதங்களை கழுவி, பால் ஊற்றி, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு வணங்கினர். அப்போது பெற்றோர், அட்சதை தூவி வாழ்த் தினர்.பள்ளியின் தாளாளர், ப.சுகந்தி, தலைமை ஆசிரியர், எஸ்.செல்வம், பள்ளியின் கல்வி ஆலோசகர், எஸ்.ஆர்.சங்கரன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.