குளித்தலை முருகன் கோவிலில், பங்குனி மாத துவக்கம்: பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2019 02:03
குளித்தலை: கீழகுட்டப்பட்டி முருகன் கோவிலில், பங்குனி மாத துவக்கத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
குளித்தலை அடுத்த, வைகைநல்லூர் அருகே, கீழகுட்டப்பட்டியில், முருகன் கோவில் உள்ளது. பங்குனி மாத முதல் தேதியை முன்னிட்டு, கிராம பொதுமக்கள் சார்பில், குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், மயில் தோகை காவடி எடுத்துக் கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து முருகனை வழிபட்டனர். விழாக் குழு சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.