பதிவு செய்த நாள்
18
மார்
2019
02:03
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நேற்று (மார்ச்., 17ல்) விமரிசையாக நடந்தது.
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டதும், 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், பெரிய பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள் என, அழைக்கப்படும், யதோக்தகாரி பெருமாள் கோவில், சின்ன காஞ்சிபுரத்தில் உள்ளது.பெருமாளின், 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோவில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரம் விமானம் மற்றும் இதர சன்னதிகள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 14ல், ஆசார்யவரணத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. கும்பாபிஷேக நாளான நேற்று, காலை, 9:30 மணிக்கு, அதிர்வேட்டுகள் முழங்க, வாத்திய மேளங்கள் ஒலித்தது.பக்தர்களின், கோவிந்தா! கோவிந்தா!! என்ற கரகோஷங் களுக்கு இடையே ராஜகோபுரம் மற்றும் பெருமாள், தாயார் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த, 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகம் என்பதால், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.