பங்குனி மாத முதல் ஞாயிறு: காளிப்பட்டி ஆஞ்சநேயருக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2019 03:03
வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறமுள்ள, பழமையான சென்றாயபெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, வீரபக்த ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (மார்ச்., 17ல்) காலை, 6:00 மணிக்கு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் மற்றும் வீரபக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட, 16 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை செய்யப்பட்டது. சேலம், நாமக்கல் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.