பதிவு செய்த நாள்
18
மார்
2019
03:03
எலச்சிபாளையம்: நல்லகுமரன்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலில், குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது.
எலச்சிபாளையம் ஒன்றியம், நல்லகுமரன்பாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோவிலில், குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த, 13ல் கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது. 15 காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை, லட்சுமி ஹோமம், காவிரி ஆற்றில் புனித தீர்த்தம் எடுத்து வருதல், மஹா சங்கல்பம், வாஸ்து சாந்தி, முதல் கால யாகபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் (மார்ச்., 16ல்), வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாக பூஜை, விக்னேஷ்வர பூஜை, விமான கலச ஸ்தாபனம், பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று (மார்ச்., 17ல்), அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, கலச பூஜை, யந்திர தானம், கலசம் புறப்பாடு, காலை, 7:20க்கு கோபுர கலசங்களுக்கு புனிததீர்த்தம் ஊற்றப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக அன்னதானம் நடந்தது. 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.