ராமநாதபுரம்:ராமநாதபுரம் வழி விடும் முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் மாணவிகளின் பரதநாட்டியம் நிகழச்சி நடந்தது.ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 12 ல் அனுக்ஞை , விக்னஷே்வர பூஜை, திருமஞ்சன அபிஷேகம், ரட்சாபந்தனம், துவாஜாரோகணம் நடந்தது.
பின் பக்தர்கள் காப்பு கட்டு நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நாட்களில் கோயிலில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. இதனை தொடர்ந்து இரவு பக்தி இன்னிசை, கரகாட்டம், ஒயிலாட்டம், ஆன்மிக சொற்பொழிவு, சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற நிகழச்சிகள் நடந்தது.மார்ச் 21 ல் நொச்சிவயல் ஊரணிக்கரையில் உள்ள ஸ்ரீபிரம்மபுரிஸ்வரர் கோயிலில் பால்குடம், காவடி புறப்பட்டு கோயிலை வந்தடைகிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. அன்று இரவு 7:00 மணிக்கு மேல் பூக்குழி இறங்கும் நிகழச்சி நடக்கிறது. இதில் நேற்று முன் தினம் மாணவிகளின் பரத நாட்டியம் கோயில் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.