பதிவு செய்த நாள்
19
மார்
2019
12:03
காஞ்சிபுரம்: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், தரைவிரிப்பு அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும், உள்ளூர், வெளியூர் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துச் செல்கின்றனர்.கடந்த ஆண்டு கோடை வெயிலின்போது, கோவில் பிரகாரத்தில் உள்ள சிமென்ட் தரையில், நடந்து செல்லும் பக்தர்களின் பாதங்களை காக்கும் வகையில், கூலிங் பெயின்ட்அடிக்கப்பட்டது. மழை, வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல், பெயின்ட் பூச்சு உதிர்ந்த நிலையில் உள்ளது. இதனால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், தரையில் உள்ள சூடு தாங்கமுடியாமல் ஓட்டம் பிடித்தனர். எனவே, தேங்காய் நாரில் தயாரிக்கப்பட்ட, மேட் எனப்படும்மிதியடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஓட்டம் பிடித்த பக்தர்கள்,மிதியடியில் நடந்து செல்வதை காண முடிகிறது.