பதிவு செய்த நாள்
19
மார்
2019
02:03
காஞ்சிபுரம்: வரதராஜப் பெருமாள் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், நேற்று (மார்ச்., 18ல்), நான்காம் நாள் பெருமாள், மலையாள நாச்சியார் வீதிவுலா நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில், 15ல், பங்குனி உத்திர திருவிழா துவங்கியது. தினமும் மாலை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார் ஆகியோர், கோவிலில் இருந்து திருவடி கோவில் வரை புறப்பாடு நடைபெறுகிறது.
பெருமாள், மீண்டும் கோவிலை சென்றடைந்து, 100 கால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த உற்சவத்தின் கடைசி நாள் வரும், 21ல் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெறும்.அன்று மாலை கோவில் நான்கு கால் மண்டத்தில், பெருமாளுக்கும் மலையாள நாச்சியாருக்கும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.