ஊட்டி:ஊட்டி ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.ஊட்டி ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக குழு, சார்பில் பங்காரு அடிகளாரின், 79 வது பிறந்த நாள் விழா மற்றும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. வழிப்பாட்டு பூஜையில், திரளான வர்கள் பங்கேற்றனர். பள்ளி குழந்தைகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.